உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் படித்துறை திறப்பு

மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் படித்துறை திறப்பு

மேட்டுப்பாளையம்:மக்கள் பயன்பாட்டிற்கு மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் படித்துறை திறந்து வைக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் உள்ளது. இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏராளமான மக்கள் வருகின்றனர். இதில் பவானி ஆற்றுக்கு செல்லும் படித்துறையை மறுசீரமைப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.இதை நீலகிரி தொகுதி எம்.பி. ராஜா திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி