உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதுப்பித்த புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் திறப்பு விழா

புதுப்பித்த புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் திறப்பு விழா

கோவை ; கணபதியில், புதுப்பிக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் திறப்பு விழா, கோலாகலமாக நடந்தது.கோவை, சத்தி ரோடு, அத்திப்பாளையம் பிரிவில், 1972ம் ஆண்டு கட்டப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம், 2024ம் ஆண்டு முழுமையாக இடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. தற்போது, 30 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட ஆலயத்தின், திறப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ், ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் புனித நீரை தெளித்து கொடியேற்றினார். தொடர்ந்து, ரிப்பன் வெட்டி ஆலயத்தை திறந்து வைத்தார். இதன்பின், ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது.இதில், கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பொருளாளர் அந்தோணி செல்வராஜ், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய பங்குத்தந்தை ஜான் பால் வின்சென்ட் மற்றும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.இன்று, புதுநன்மை உறுதி பூசுதல் வழங்கும் விழாவும், நாளை மறுநாள் பங்கு திருவிழா மற்றும் குடும்ப விழா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி