உள்ளூர் செய்திகள்

இன்பாக்ஸ்

15. சாக்கடை குளத்தால் அவதி மருதமலை அடிவாரத்தில் சாலையின் ஒரு புறம் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மறுபுறம் சோமையம்பாளையம் ஊராட்சியிடமும் உள்ளது. மழைநீர் வடிகால் உள்ளது. ஆனால், வடிகாலில் வெளியேறும் கழிவுநீர், சோதனை சாவடி அருகில் உள்ள நிலத்தில் விடப்படுகிறது. அது குளம்போல் காட்சி அளிக்கிறது. அதில், பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்துள்ளது. பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது‌. பக்தர்கள் மூக்கை பொத்திக் கொண்டே செல்கின்றனர். -–பரமசிவம்: 16. சாலையில் நிற்கும் பஸ் ஒப்பணக்கார வீதி பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் சாலை நடுவே நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது.  அங்கு பஸ் பே அமைக்கப்பட்டதே நெரிசலை தவிர்க்க தான். சில நாட்கள் ஒழுங்காக நின்றன. அதோடு சரி. அதிகாரிகள் கவனிக்க வேண்டும். –சங்கீதா: 17. ரோடை சரிசெய்ய வேண்டும் மகாலிங்கபுரம் – நஞ்சுண்டாபுரத்தை இணைக்கும் ஆற்றோர ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டை விட்டால் போத்தனூர் வரை 4 கி.மீ சுற்றி வரவேண்டும். இந்த ரோட்டை பயன்படுத்துவதால் எலும்பெல்லாம் வலிக்கிறது. சாலையை சீரமைக்க வேண்டும். –வேல்முருகன்: 18.பயனற்ற பஸ் ஸ்டாப்  அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரி அருகே சமீபத்தில் பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைத்தனர். ஆனால், பஸ்கள் ஸ்டாப்பில் நிற்காமல், 50 மீட்டர் தள்ளி சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் நெரிசல் ஏற்படுகிறது. கண் மருத்துவமனை உள்ளதால், பயணிகள் அதிகம். விபத்து நடக்குமுன் நடவடிக்கை எடுக்க வேண்டும். –மீனாட்சி: 19. எங்களுக்கு கேப் தேவை வெயிலுக்கு தொப்பியும், மழைக்கு ரெயின்கோட்டும், தினசரி பணிக்கு கையுறை, பாதுகாப்பு ஷூக்கள், மாஸ்க் வேண்டும் என கேட்டு வருகிறோம். குப்பைகளை பிரித்து வைக்க பெட்டிகள் போதாது. சக்கரம் சரியில்லாத தள்ளுவண்டிகளை தள்ள முடியவில்லை. தூய்மை பணியாளர்கள் தேவையை அதிகாரிகள் பூர்த்தி செய்தால் நாங்கள் சிறப்பாக வேலை செய்வோம். –முருகன், சாய்பாபா காலனி. 1. ஒளிரா விளக்கு சிங்காநல்லுார் காமராஜர் மெயின் ரோட்டில், கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை எதிரே உள்ள பி.எஸ்.ஜி. கோவிந்தசாமி நகரில் 3 மாதங்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது.  –ராஜ்குமார்: 2. சேரன் மாநகர் விளாங்குறிச்சி, மவுனசாமி நகரில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். –நிஷாந்தன்: 3. போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம், வாய்க்கால் ரோட்டில் உள்ள பல தெருவிளக்குகள்  எரியாமல் உள்ளன. இரவில் விபத்து, திருட்டு ஆகிய அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.  –ரமேஷ் ராஜா: 4. சிங்காநல்லுார்(படம் இல்லை) சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, டாக்டர் ஜெ.ஜெ. நகரில், பல தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. சில இடங்களில் தெருவிளக்கே இல்லை. –மோகன் பிரசாத்: 5. பாலாஜி நகர் மாநகராட்சி வார்டு 38, பாலாஜி நகர், ஐ.ஓ.பி. காலனியில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் இருப்பதால் இரவில் சிரமம் ஏற்படுகிறது.  –மனோகரன்: 6. வெள்ளக்கிணறு வெள்ளக்கிணறு, நெஸ்ட் ரெசிடென்ஸில் தெருவிளக்குகள் 10 நாட்களாக எரியவில்லை. தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். –நாகசுப்பிரமணியம்: 7. சாலையில் குப்பை  வேடபட்டி–பேரூர் ரோட்டில் குளத்துக்கு செல்லும் வாய்க்கால் அருகே மக்காத குப்பை கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலம், நீர்நிலை மாசடைகின்றன.  –வடிவு: 8. உக்கடம்  உக்கடம் லாரிப்பேட்டையில் பழைய மார்க்கெட், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. –நசீர் அகமது: 9. சேதமடைந்த ரோடு சுண்டக்காமுத்தூர், வார்டு 89, குமரன் கார்டன் பகுதியில் 12 ஆண்டுகளாக ரோடு அமைக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படவில்லை.  –முரளி: 10. தனம் நகர்  அவினாசி ரோடு முதல் மயிலம்பட்டி செல்லும் வழியில் தனம் நகர் நுழைவுப் பகுதியில் 4 மாதங்களாக சேதமடைந்த ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது.  –பழனிசாமி: 11. கழிவுநீர் தேக்கம் வெள்ளக்கிணறு, ஜெம் பீல்டு அவென்யூவில், மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. – இந்து: 12. கால்வாயில் புதர்கள் சிங்காநல்லூர், மாநகராட்சி வார்டு 54, இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை எதிரே அங்கம்மாள் லேஅவுட்டில் உள்ள கால்வாயில் அதிகளவில் முட்கள் வளர்ந்து புதராகி உள்ளன. இதனால் விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் புகுவதுடன், சாக்கடை அடைப்பும் ஏற்பட்டுள்ளது. –ஜனார்த்தனன்: 13. நடைபாதை ஆக்கிரமிப்பு கிராஸ்கட் ரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அருகே, நடைபாதையில் குடிநீர் குழாய்கள் உள்ளன. நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.  –உதயகுமார்: 14. நோ பார்க்கிங் வாகனங்கள் முக்கியமான ரோடுகளில் நோ–பார்க்கிங் என போலீஸ் வைத்திருக்கும் போர்டுகளை பொருட்படுத்தாமல் வண்டிகளை நிறுத்துகின்றனர். தண்டனையை அபராதத்தை உயர்த்த வேண்டும். –விநாயகம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை