விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு
கோவை: தீபாவளி பண்டிகையை யொட்டிபொதுமக்கள், ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். இதுதவிர, தங்களது உறவினர்களுக்கு, இனிப்புகள், ஆடைகளை பரிசாக வழங்கவும் வாங்குகின்றனர். வெளியூர்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு தீபாவளிக்கு பரிசுகளாக மொபைல்போன்கள், டி.வி., க்கள், இயர்பட்ஸ்கள், பவர்பேங்க், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இ-காமர்ஸ் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக, கோவை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்கு பரிசு வழங்குவது தற்போது அதிகரித்துள்ளது. வழக்கமாக, 800 டன்கள் வரை உள்நாட்டு சரக்கு போக்குவரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக, தீபாவளி பண்டிகையால், 500 டன் வரை அதிகரித்துள்ளது' என்றனர்.