உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; குடியிருப்புகளை ஒருங்கிணைக்கணும்

வால்பாறை; வால்பாறை, எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால், தொழிலாளர்களின் வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் மனித - வனவிலங்கு மோதல்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டத்தால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிய வருகிறது. வனவிலங்களுக்கு பயந்து தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:வால்பாறையில், யானை வழித்தடத்தில் உள்ள 'ரிசார்ட்'களை அப்புறப்படுத்த வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாடுவதை தவிர்க்க தனித்தனியாக உள்ள, தொழிலாளர்களின் வீடுகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தால், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் எஸ்டேட் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, சுமூக தீர்வு கண்டால் மட்டுமே, மனித - வனவிலங்கு மோதலை தடுக்க முடியும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை