உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுண்டானா பகுதியில் நெரிசல் அதிகரிப்பு; கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு ஆய்வு

ரவுண்டானா பகுதியில் நெரிசல் அதிகரிப்பு; கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு ஆய்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ரவுண்டானா பகுதிகளில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, திருவள்ளுவர் திடல் ஆகிய பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டது. இருப்பினும், ரவுண்டானாவில், முறையாக வாகனங்களை இயக்கத் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.அவ்வப்போது, அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களால், விபத்தும் ஏற்படுகிறது.மேலும், ரவுண்டானா பகுதியை சுற்றிலும், வாகனங்களை 'பார்க்கிங்' செய்தால், போக்குவரத்து பாதிக்கும் என்பதால், 'பார்க்கிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டுநர்கள் அத்துமீறி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.விசேஷ நாட்களில், கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், ரவுண்டானாவை கடந்து செல்ல வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தடுக்க அங்கு சிக்னல் அமைக்கலாம் என போலீசார் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி, உதவி பொறியாளர் தனுஸ்ரீ, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் குழுவினர், காந்தி சிலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அங்குள்ள ரவுண்டானா மற்றும் ரோடுகளை அளவீடு செய்து, நெரிசலை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரவுண்டானாவை அகலப்படுத்தி நெரிசலை கட்டுப்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது. நெரிசலை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் குழுவுடன் ஆய்வு செய்யப்பட்டது.தற்போதுள்ள பகுதியில், நெரிசலை கட்டுப்படுத்த ரவுண்டானாவை விரிவுபடுத்துவதுடன், சாலைகளில் வாகனங்கள் நிறுத்தம் செய்வதை தவிர்ப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை