உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரசாயன உரங்களால் நச்சுத்தன்மை அதிகரிப்பு

ரசாயன உரங்களால் நச்சுத்தன்மை அதிகரிப்பு

அன்னுார் : 'ரசாயன உரங்கள் மண்ணை நச்சாக்கும்,' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஜே. கே.கே. முனி ராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின், அன்னுார் வட்ட கிராம தங்கல் திட்ட மாணவர்கள், அவிநாசி கிழக்கு ரோட்டரி கிளப்புடன் இணைந்து, பூமியை காக்கும் இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் துறையில் தொழில் வாய்ப்புகள் என்னும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடத்தின.ஈஷா அறக்கட்டளையின், வேளாண் எழுத்தாளர் சுபாஷ் பேசுகையில், தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் நச்சுத்தன்மை ஏற்படும். நிலத்தடி நீரும் மாசுபடும். செயற்கை உரங்கள் உணவுப் பொருள் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவதால் மண்ணின் தரம் மேம்படும். விளை பொருட்களும் தரமானதாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.இந்த கருத்தரங்கில் மாணவர்கள், வேளாண் ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணையவழியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி