உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின நுால் வெளியீடு

சுதந்திர தின நுால் வெளியீடு

கோவை; கோவையில், 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு மற்றும் கோதனா இலவச ஆலோசனை மையம் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த வரலாற்று நுால் வெளியீட்டு விழா, காவலர் குடியிருப்பு சமுதாய கூட அரங்கில் நேற்று நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர்சரவண சுந்தர், விழாவுக்கு தலைமை வகித்து, நுாலை வெளியிட்டார். நுாலாசிரியர் கோதனவல்லி ஏற்புரையாற்றினார்.விழாவில் மனநல டாக்டர் மோனி, ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன், பாரதியார் பல்லை தமிழ்த்துறை தலைவர் சித்ரா, நேரு கல்வி நிறுவன இயக்குனர் முரளிதரன், சுதந்திர போராட்ட வீரர்கள் நலச்சங்க துணைத்தலைவர்ஜெயப்பிராகாஷ் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ