காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா
கோவை; கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்., செயலாளர் மயூரா ஜெயக்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பங்கு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விளக்கி பேசினார். கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி, மாநில பொதுச் செயலாளர் சிவகுமார், வீனஸ்மணி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.