இன்பினியம் க்ரிம்சன் கிரெஸ்ட்; புதிய அடுக்குமாடி குடியிருப்பு
கோவை : இன்பினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம், தனது இரண்டாவது பிரீமியம் புராஜெக்ட்டான 'இன்பினியம் க்ரிம்சன் கிரெஸ்ட்' அடுக்குமாடி குடியிருப்பினை, கோவை பீளமேட்டில் உள்ள மகேஸ்வரி நகரில் அறிமுகம் செய்துள்ளது. இங்கு, இரண்டு, மூன்று படுக்கை அறைகள் கொண்ட மொத்தம், 130 பிளாட்டுகள் நவீன கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு படுக்கையறைகள் கொண்ட பிளாட்டுகள், 1200 சதுர அடி அளவிலும், மூன்று படுக்கையறை கொண்ட பிளாட்டுகள், 1500 சதுர அடி அளவிலும் விசாலமாக அமைந்துள்ளது.டைடல் பார்க்கில் இருந்து, இரண்டு நிமிட பயண துாரத்தில் பிளாட்டுகள் அமைந்துள்ளன. ஐ.டி., நிறுவனங்கள், முன்னணி பள்ளிகள், கல்லுாரிகள். மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் எளிதில் சென்றடையும் வகையில், அனைத்து வசதிகளுடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், ''ஒரு சதுரடி 5999 ரூபாய்- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சொந்த வீடு வாங்குபவர்களுக்கும், முதலீடு செய்பவர்களுக்கும் இது ஒரு அரிய வாய்ப்பு,'' என்றார். மேலும் விபரங்களுக்கு, 97870 10000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.