உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்கம்

பாரதியார் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்கம்

கோவை; யு.ஜி.சி., - மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம், பாரதியார் பல்கலை சார்பில், கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி நேற்று துவங்கியது. பல்கலை பதிவாளர் ராஜவேல் பேசுகையில், ''பேராசிரியர்களின் சீரிய முயற்சி, நேர மேலாண்மை கடைபிடித்தல், கடமை தவறாமை, மாணவர்களை நல்வழியில் நடத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அது, அவர்களுக்கு பல உயர்ந்த தகுதிகளை பெற்றுத்தரும்,'' என்றார். முன்னதாக, மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மைய இயக்குனர் சுரேஷ்பாபு வரவேற்றார். பேராசிரியர்கள் மதியழகன், கவியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை