உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளுக்கு கூட்டுக்குடிநீர்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

வீடுகளுக்கு கூட்டுக்குடிநீர்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' என்கிற சிறப்பு திட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.கவுண்டம்பாளையம் அங்கன்வாடி மையத்துக்கு சென்ற கமிஷனர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டு, அதன் சுவை மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்ற அவர், உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேட்டை சரிபார்த்தார்.கவுண்டம்பாளையம் காமராஜ் நகரில் புதிதாக வணிக வளாகம் கட்டுவது; பெரியண்ணன் நகரில், கவுண்டம்பாளையம் - வடவள்ளி - வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு சோதனை முறையில் வினியோகிப்பதை, கமிஷனர் நேரில் பார்வையிட்டார்.பின், 34வது வார்டு கிரி நகர் மற்றும் ஸ்ரீதேவி நகர் நான்காவது வீதியில் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (19ம் தேதி) நடைபெறும், 'நான் முதல்வன் உயர்வுக்குப் படி' நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தினார்.அப்போது, துணை கலெக்டர் (பயிற்சி) மதுஅபிநயா, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, கல்விக்குழு தலைவர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ