உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்லடம் - கொச்சின் சாலையில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

பல்லடம் - கொச்சின் சாலையில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, பல்லடம் - கொச்சின் சாலையில், மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.நெடுஞ்சாலை துறை சார்பில் நிறைவடைந்த மற்றும் தற்போது நடந்து வரும் பணிகளை, துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து தரப்பரிசோதனை செய்யும், துறை ரீதியான உள்தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு (உட்கோட்டம்) நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட, பல்லடம் -- கொச்சின் சாலையில் குமிட்டிபதியில் இருந்து 5.6 கி.மீ., நீளமுள்ள ஓடுதள மேம்பாட்டு பணிகள் உள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஓடுதளத்தின் தரம், சாலை பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை, தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், கோவை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை