இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வால்பாறை; வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக ராமசந்திரன் பொறுப்பேற்றார். வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆனந்தகுமார், ஈரோடு மாவட்டத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, துத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராமசந்திரன், வால்பாறை இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். பணி மாறுதலாகி செல்லும் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாருக்கு, போலீசார் சார்பில் பிரிவு உபச்சார விழா நடந்தது. வால்பாறை, காடம்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.