உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றம் மாற்று மரக்கன்றுகள் நடவு செய்யலாமே!

ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றம் மாற்று மரக்கன்றுகள் நடவு செய்யலாமே!

பொள்ளாச்சி; ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் வேரோடு அகற்றப்பட்டாலும், அதற்கு மாற்றாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ரோடு விரிவாக்கம் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, இருவழிச்சாலை, நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, சாலை மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அப்போது, ரோட்டோரத்தில் மறு நடவு செய்ய வாய்ப்புள்ள மரங்கள் கண்டறியப்பட்டால், அதனை வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மறு நடவும் செய்யப்படுகிறது. அதன்படி, ஆலம், அரச மரம் போன்றவை அதிகளவு நடவு செய்யப்படுகின்றன. தகுதியற்ற மரங்கள், வெட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அதற்கு மாற்றாக, புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில், மேற்கு புறவழிச்சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.ரோட்டின் இருபுறமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக, மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால், மாற்று மரக்கன்றுகள் நடவு செய்ய ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களை நம்பி இருந்த பல உயிரினங்கள் பாதிக்கப்பட்டு இயற்கை சமநிலை பாதிக்கப்படும். அதனால், அனைத்து சாலை ஓரங்களிலும், மரக்கன்றுகள் நட முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ