உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முகவரி மாறிச் சென்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தல்

முகவரி மாறிச் சென்ற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தல்

கோவை; கோவை மாவட்டத்தில், நிரந்தரமாக முகவரி மாறிச் சென்ற வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயரை, பட்டியலில் இருந்து நீக்குவதற்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்., 29ல் துவங்கி, நவ., 28 வரை நடந்தது. ஒரு லட்சத்து, 44 ஆயிரத்து, 511 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து, பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து, மொபைல் போன் செயலி வாயிலாக பதிவேற்றம் செய்கின்றனர். மேற்பார்வையாளர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களும் அவ்வப்போது கள ஆய்வு செய்கின்றனர்.'ரேண்டம்' முறையில் மேலாய்வு செய்ய, 'இஆர்ஓ நெட் 2.0'-ல் சில படிவங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லுார் தொகுதியில் உப்பிலிபாளையம் கிராமம் நஞ்சப்பா ரோடு பகுதியில், புதிய வாக்காளர் பெயர் சேர்க்க கொடுத்த விண்ணப்பம், அரவான் கோவில் பகுதியில் திருத்தம் மேற்கொள்ள கொடுத்த விண்ணப்பத்தை கலெக்டர் கிராந்திகுமார் நேற்று மேலாய்வு செய்தார்.நிரந்தரமாக முகவரி மாறிச் சென்றவர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்க, விதிமுறைக்கு உட்பட்டு நோட்டீஸ் அனுப்ப, தேர்தல் பிரிவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி