உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முழு சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

முழு சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கோவை: வடவள்ளி ரோடு, இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி,62; அரசு ஓய்வூதியருக்கான புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். இவரது ஓய்வூதியத்தில், மாதந்தோறும் காப்பீடு பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்பட்டது. 2024ல் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 4.66 லட்சம் ரூபாய் செலவானது. இத்தொகையை வழங்கக்கோரி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு விண்ணப்பித்தார். இரண்டு லட்சம் ரூபாய் மட்டும் வழங்கினர். விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பதில் தரவில்லை. மீதித்தொகை, இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மருத்துவ செலவுக்கான மீதித்தொகை, 2.65 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடு, வழக்கு செலவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை