உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச பலுான் திருவிழா துவக்கம்; பார்வையாளர்கள் பரவசம்

சர்வதேச பலுான் திருவிழா துவக்கம்; பார்வையாளர்கள் பரவசம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், 10வது தமிழ்நாடு சர்வதேச பலுான் திருவிழா நேற்று துவங்கியது. வானில் வெப்ப பலுான்கள் பறப்பதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழக சுற்றுலாத்துறை, குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில், 10வது தமிழ்நாடு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நேற்று துவங்கியது.அமெரிக்கா, தாய்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரேசில், வியாட்நாம், பெல்ஜியம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து, 12 பலுான்கள் வந்துள்ளன. மூன்று நாள் பலுான் திருவிழா நாளை (16ம் தேதி) நிறைவு பெறுகிறது.நேற்று காலை, ஒவ்வொரு பலுானும் வெப்ப காற்று செலுத்தி வானில் பறக்க விடப்பட்டன. சிறுத்தை, பேபி மான்ஸ்டர் உள்ளிட்ட எட்டு வகையான பலுான்கள், வானில் பறந்ததை பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்து, மொபைல்போனில் படம் பிடித்தனர்.அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர், பலுான்கள் முன்பு படம் எடுத்துக்கொண்டனர். மைதானத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், புலி, நாய், இதய வடிவம் உள்ளிட்ட, நான்கு வகையான குட்டி பலுான்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'சென்னையில், துவங்கப்பட்ட இந்த பலுான் திருவிழா, 10வது ஆண்டாக பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. காலை நேரத்தில் வெப்ப பலுான்கள் பறக்க விடப்படுகிறது. மாலை, 4:00 மணி முதல் இரவு, 10:00 மணி மக்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ