சர்வதேச செவிலியர் வார விழிப்புணர்வு வாக்கத்தான்
கோவை: சர்வதேச செவிலியர்வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், 'நமது செவிலியர்; நமது எதிர்காலம்' என்ற பெயரில், 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடந்தது.ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் நடந்த வாக்கத்தானை, மாவட்ட கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில்,முதலுதவி, உடல் ஆரோக்கியம் என பல்வேறு தலைப்புகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பேசுகையில், ''மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு, மிகப்பெரும் ஆதரவு அமைப்பாக செயல்படும் செவிலியர்களின், பேரிடர் கால விலைமதிப்பற்ற சேவைகளைஅங்கீகரிக்க வேண்டும்,'' என்றார்.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், மருத்துவமனையின் தலைமை செவிலியர் துறை அதிகாரி கிரிஜா, தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.