உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆகாஷ் இன்விக்டஸ் பயிற்சி பாடத்திட்டம் அறிமுகம் 

ஆகாஷ் இன்விக்டஸ் பயிற்சி பாடத்திட்டம் அறிமுகம் 

கோவை; பீளமேடு ஆகாஷ் கல்வி நிறுவனம் சார்பில் 'ஆகாஷ் இன்விக்டஸ்' என்ற புதிய பயிற்சி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அறிமுக விழாவில், அகடமி தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறியதாவது:புதிய பயிற்சி திட்டமான, ஆகாஷ் இன்விக்டஸ் வாயிலாக, மாணவர்கள் ஐ.ஐ.டி., மற்றும் தலைசிறந்த பல்கலைகளில் பொறியியல் பிரிவில் சேர்ந்து படிக்க இயலும். ஜே.இ. இ., தேர்வுக்கான அப்டேட் செய்யப்பட்ட முன்மாதிரி பாடத்திட்டம் இது.இப்பயிற்சித்திட்டத்தில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தி தகுதிபெறும் மாணவர்கள் மட்டுமே சேர இயலும். இப்பாடத்திட்டம், பிளஸ் 1 படிப்பவர்களுக்கு இரண்டாண்டு திட்டமாகவும், பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு திட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.மேலும், சேர்க்கை சார்ந்த விபரங்களுக்கு 7303759494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.புதிய பயிற்சி பாடத்திட்ட அறிமுக விழாவில், மாநில தலைவர் சிவபிரசாத், இன்விக்டஸ் திட்ட அகடமிக் தலைவர் சஷாங்கா சேகர் தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை