இன்வென்டரி கன்ட்ரோலர் விருது
கோவை: கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு, 2025ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 'இன்வென்டரி கன்ட்ரோலர்' விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறை சார்ந்த செய்திகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் இன்சைட்ஸ் கேர் என்ற பத்திரிகை சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது. மருத்துவதுறையில் 30 ஆண்டுக்கும் மேல் பணியாற்றிய அனுபவமுள்ள இவர், பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு மாநில தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். கே.எம்.சி.எச்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் விருது பெற்ற சிவகுமாரனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.