உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்னி பஸ்களில் குட்கா கடத்தல்; பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை

ஆம்னி பஸ்களில் குட்கா கடத்தல்; பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை

கோவை; தனியார் ஆம்னி பஸ்சில் குட்கா கடத்தி வந்த, இருவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய தனியார் ஆம்னி பஸ்சையும், பறிமுதல் செய்தனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதை தடுக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, கோவை, கரும்புக்கடை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர்.அதில், 100கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த ஜாகீர் உசைனை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து, ஆம்னி பஸ்களில் கடத்தி வருவதாகவும், இதற்காக பெங்களூரு ஆம்னி பஸ் அலுவலகத்தில் பணியாற்றும் நபர்களுக்கு, பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனியார் ஆம்னி பஸ் கம்பெனியில் (எஸ்.ஆர்.எஸ்., டிராவல்ஸ்) பணியாற்றும் கோவை லட்சுமி மில் பகுதியை சேர்ந்த நாகராஜை, 38 கைது செய்தனர்.குட்கா கடத்தி வர பயன்படுத்தப்பட்ட, ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த இருவர் மீதும், வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல்வேறு பகுதிகளில், இதுபோன்று குட்கா விற்பனை செய்து வருகின்றனர். ஒருவரை பிடித்து, அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், அடுத்த நபரை பிடித்து வருகிறோம். இது போன்று ஆம்னி பஸ்களில், கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பஸ் பறிமுதல் செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை