உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் விளைபொருள் ஏலத்துக்கு அழைப்பு

வேளாண் விளைபொருள் ஏலத்துக்கு அழைப்பு

அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று ஏல விற்பனை நடைபெறுகிறது. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று காலை 10:00 மணிக்கு வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது. இதில் தேங்காய், கொப்பரை, பருத்தி, வாழைக்காய் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்று பயன்பெறலாம். எந்த கமிஷனும் தரத் தேவையில்லை. 'நல்ல விலை கிடைக்காவிட்டால் இருப்பு வைத்து பின்னர் விற்பனை செய்யலாம். இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்,' என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி