மேலும் செய்திகள்
'உழவரை தேடி' திட்டம் கிராமங்களில் துவக்கம்
31-May-2025
அன்னுார்; 'உழவரைத் தேடி' முகாமில் பங்கேற்க, வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், 'உழவரைத் தேடி' உழவர் நலத்திட்ட முகாம் ஊராட்சி தோறும் நடைபெறுகிறது. அன்னுார் வட்டாரத்தில் நாளை (27ம் தேதி) காலை 10:00 மணிக்கு, அன்னுார் சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. முகாமில் வேளாண், வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து தெரிந்து கொள்ளலாம். இதர துறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31-May-2025