உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு

தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு

கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில் வருகிற 14ம் தேதி தமிழ்ச் சங்க விழா நடைபெறுகிறது. கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் வருகிற 14ம் தேதி காலை 9:30 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது. விழாவில் தலைமை ஆசிரியர் (பணி நிறைவு) ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். முனைவர் யமுனாதேவி, 'குறிப்பின் குறிப்புணர் வாரை' என்னும் தலைப்பில் பேசுகிறார். நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். பெரிய புராண நாயன்மார்களை நினைவு கூர்ந்து பேச்சாளர்கள் பேசுகின்றனர். திருப்பூர், திருமுருகநாதர் சாமிகள் திருமடத்தின் நிறுவனர், சுந்தரராசன் அடிகள் பேசுகிறார். 'படித்ததில், பிடித்தது', 'தமிழின் சிறப்பு' ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர். விழாவில் பங்கேற்று தமிழ் அமுதம் பருக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை