உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை!

ஐ.ஓ.பி., அணிக்கு டெக்ஸ்மோ கோப்பை!

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த மாநில அளவிலான டெக்ஸ்மோ கோப்பைக்கான வாலிபால் இறுதிப் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) அணி, வெற்றி பெற்றது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா உள்விளையாட்டு அரங்கில், துடியலூர் அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான, 54வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி அணியை, ஐ.ஓ.பி., அணி, 25:9, 25:22, 25:20 என்ற புள்ளிகள் அடிப்படையில், 3--0 என்ற நேர் செட்டில் வென்று, டெக்ஸ்மோ கோப்பை மற்றும், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை தட்டிச் சென்றது.இரண்டாம் இடம் பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு, 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த சுங்கவரி அணிக்கு, 45 ஆயிரம் ரூபாய், நான்காம் இடம் பிடித்த அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு, 40 ஆயிரம் ரூபாய், ஐந்தாம் இடம் பெற்ற தமிழக காவல்துறை அணிக்கு, 35 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன.அக்வா குரூப் நிர்வாக இயக்குனர் குமாரவேலு, இணை நிர்வாக இயக்குனர் தாரா குமாரவேலு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை