உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் ஈரத்தை பொறுத்து நீர்பாசனம் செய்யணும்

மண் ஈரத்தை பொறுத்து நீர்பாசனம் செய்யணும்

கோவை;கோவையில் கடந்த வாரத்தை காட்டிலும், பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன் படி, பகல் நேரத்தில், 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரத்தில் 23-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை இருக்கும். காற்றின் ஈரப்பதம் காலையில், 70 சதவீதமாகவும், மாலையில் 20 சதவீதமாகவும் பதிவாகும். விவசாயிகள் மண் ஈரத்தினை பொருத்து, நீர்பாசனம் செய்யவேண்டும். கால்நடை மற்றும் கோழிகளுக்கு, போதுமான சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். வெயில் நேரத்தில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ