உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜல்லி மட்டும் பரப்பினால் போதுங்களா?

ஜல்லி மட்டும் பரப்பினால் போதுங்களா?

தொண்டாமுத்துார்; வெள்ளெருக்கம்பாளையத்தில், சாலை சீரமைக்க, ஜல்லிக்கற்கள் கொட்டி மூன்று மாதங்களாகியும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசீபுரம் மெயின் ரோட்டில் இருந்து வெள்ளெருக்கம்பாளையம் மயானம் முதல் செலம்பனுார் -- கொண்டையம்பாளையம் வரை, 1.5 கி.மீ., இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்தவை; 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இச்சாலையை விவசாயிகளே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை, சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.ஊராட்சி நிர்வாகம் சார்பில், இச்சாலையை சீரமைக்க, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 60.45 லட்சம் ரூபாய் ஒதுக்கி, நான்கு மாதத்துக்கு முன் டெண்டர் விடப்பட்டது. பழைய சாலையை கொத்தி, அதன் மீது, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.அதன்பின், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளதால், இவ்வழியாக விவசாய விளைபொருட்களை, வாகனங்களில் எடுத்துச்செல்லும் விவசாயிகள், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட சாலையால், அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ