உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை

வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை

பு த்தாடை, இனிப்பு பலகாரங்கள் மற்றும் பட்டாசு என்பதே தீபாவளி பண்டிகையின் அடையாளம். நம் குழந்தை பருவ நினைவேடுகளில் பட்டாசும், புத்தாடையும் நீங்கா இடம்பெற்று இருக்கும். சத்குருவின் ஈஷா அறக்கட்டளை, சுற்றியுள்ள கிராமங்களில் தீபாவளியின் கொண்டாட்ட ஒளியை பெரும் உற்சாகத்தோடு பரப்புகிறது. ஈஷாவை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட பழங்குடி குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்கள், தங்களின் தீபாவளி திருநாளை ஈஷாவின் உதவியோடு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில், ஈஷா அறக்கட்டளை சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள காந்தி காலனி, நொய்யல் நகர், ராஜீவ் காலனி, இருட்டுப்பள்ளம், செம்மேடு, முட்டத்துவயல், பெருமாள்கோவில்பதி, பச்சினாம்பதி, மூங்கில்மடைகுட்டை, மடக்காடு, பட்டியார்கோவில் பதி உட்பட, 28 கிராமங்களில் இருக்கும் 2,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் இனிப்பு வழங்கி வருகின்றனர். இத்துடன், 500 குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு பட்டாசுகள், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை துணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன், ஈஷா யோகா மையத்தில் பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம் ஒரு அழகான, வண்ணமயமான நிகழ்வாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது.பழங்குடி கிராம மக்கள், தீபாவளி நாளில், ஆதியோகி முன் திரண்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, அவர்களின் பாரம்பரிய பழங்குடி ஆடல், பாடல்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர். இதுகுறித்து, தானிக்கண்டி பழங்குடி கிராம மக்கள் கூறியதாவது:தீபாவளி சமயத்தில், ஈஷாவில் இருந்து வருகிறார்கள் என்றாலே, குழந்தைகள் மிகவும் ஆனந்தமாகி விடுவர். ஒரு காலத்தில் பண்டிகை காலங்களில் புத்தாடை, இனிப்புகள் எல்லாம் இல்லாத சூழல் இருந்தது. இப்போது ஈஷாவில் இருந்து எங்களின் வீடு தேடி வந்து அனைத்தும் தருகின்றனர். எங்களின் குழந்தைகளோடு பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி முதல் மருத்துவம் வரை பல உதவிகளை ஈஷா எங்களுக்கு செய்கின்றது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை