உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுந்தராபுரத்தில் ஈஷா யோகா பயிற்சி

சுந்தராபுரத்தில் ஈஷா யோகா பயிற்சி

கோவை: ஈஷா யோகாவின் ஏழு நாள் பயிற்சி, வரும் 5ம் தேதி சுந்தராபுரத்தில் துவங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த அழைப்பு விடப்பட்டுள்ளது. சுந்தராபுரம் சிட்கோ, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் உள்ள, கஸ்துாரி சர்வமங்கள்ய மண்டபத்தில், வரும் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலை 6:00 மணி முதல் 8:30 வரையும், மாலை 6:00 முதல் 8:00 மணி வரையும் நடத்தப்படும் வகுப்பில் சாம்பவி மகா முத்ரா பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. இதன் வாயிலாக, ரத்த அழுத்தம், உடற்பருமன், சர்க்கரை வியாதி, முதுகுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது எனவும், சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, செயல்திறன் அதிகரித்து, உள் நிலையில் அமைதி, ஆனந்தம், நிறைவை உணரலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.முன்பதிவு: isha.co/iyp- sundarapuram தொடர்புக்கு: 72007 88778, 90922 23735.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை