மேலும் செய்திகள்
உறுப்பினர் அட்டை வழங்கல்
11-Sep-2024
வால்பாறை, : வால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில், எஸ்டேட் தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் நடந்தது.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி பேசுகையில், ''சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை வாக்காளர்களிடம் தெரிவிக்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலை விட, வரும் சட்டசபை தேர்தலில் அதிகமான ஓட்டு வாங்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
11-Sep-2024