ரயில்வே ஸ்டேஷன் ரோடு விரிவுபடுத்துவது அவசியம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, பயணியர் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பயணியர், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் இறங்கி, நடந்தோ அல்லது ஆட்டோ வாயிலாகவோ செல்கின்றனர்.பஸ்சில் வந்தாலும், மெயின் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டி உள்ளது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்.மேலும், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், ஆங்காங்கே காலி மது பாட்டில்கள் வீசப்பட்டும், குப்பையாகவும் இருக்கிறது. இதை தவிர்க்க, ரயில்வே ஸ்டேஷன் வரை பஸ் செல்லும் வகையில் ரோடு விரிவாக்கம் செய்து, ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியைச் சுற்றிலும் 'பென்சிங்' அமைக்க வேண்டும்.ரோடு விரிவாக்க பணி செய்து, ஸ்டேஷன் வரை பஸ் இயக்கினால், ரயில் பயணியர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். எனவே இதை விரைவாக செயல்படுத்த வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.