மேலும் செய்திகள்
அரசு பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
18-Oct-2025
அன்னுார்: 'பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆகியும் நிலம் அளந்து தரவில்லை,' என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சொந்த இடமும் வீடும் இல்லாத 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 80 பேருக்கு மட்டும் 1996, 2007 ஆகிய ஆண்டுகளில் கஞ்சப்பள்ளியில் இலவச வீட்டு மனை பட்டா தரப்பட்டது. இதில் 80 பேருக்கு பட்டா தந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் அளந்து தரப்பட்டது. 90 சதவீதம் பேருக்கு நிலம் அளந்து ஒதுக்கி தரப்படவில்லை. இதனால் வீடு கட்ட முடியவில்லை. வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பிரித்து ஒதுக்கி அளந்து தர வேண்டுமென தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய நிலத்தை அளந்து ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
18-Oct-2025