உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பேரணி

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பேரணி

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -- ஜியோ அமைப்பு சார்பில் பேரணி நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ -- ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க பேரணி, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் எதிரே தனியார் பள்ளியில் இருந்து துவங்கியது.பேரணியை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் தங்கபாசு துவக்கி வைத்தார். பாலக்காடு ரோடு வழியாக சென்று, வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.கோரிக்கை விளக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சாலமன் ராஜ் பேசினார்.சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் அம்சராஜ் கோரிக்கை குறித்து விளக்கினார். நிர்வாகி நிவாஸ் நன்றி கூறினார்.ஜாக்டோ -- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் காஜா முகைதீன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ஹிதயாத்துள் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை