உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; ஜாக்டோ-ஜியோ அமைப்பு முடிவு

வட்டார அளவில் ஆயத்த கூட்டம்; ஜாக்டோ-ஜியோ அமைப்பு முடிவு

கோவை; கோவை மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டம், தாமஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சாலமன்ராஜ் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி ஆகியோர் கூட்டு தலைமை ஏற்றனர்.இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.'வரும், 25ம் தேதி நடக்கும் சாலை மறியல் போராட்டத்தில், 10 ஆயிரம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும், போராட்டத்துக்கான ஆயத்த கூட்டங்களை வட்டார அளவில் நடத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ