மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
18-Aug-2025
சூலுார்; சூலுார் எஸ்.ஐ., அருள் பிரகாஷ் கலங்கல் ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது, காசி கவுண்டன்புதூர் டாஸ்மாக் பார் அருகே ஒரு நபர் சாக்கு மூட்டையில் மது பாட்டில்களை வைத்து சட்டவிரோதமாக விற்றதை கையும் களவுமாக பிடித்தார். அந்நபரை பிடித்து விசாரித்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கரிகாலன், 53 என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18-Aug-2025