உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர்களுக்கு சிறை

விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர்களுக்கு சிறை

கோவை ;விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோட்டில் போதை மாத்திரை விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், விற்பனைக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்தனர்.அவர்கள், செல்வபுரம், சொக்கம்புதூரை சேர்ந்த கிருஷ்ணதாஸ், 24, தெலுங்குபாளையம் பிரிவு நாராயணசாமி நகரை சேர்ந்த பொன்மணி, 24 எனத் தெரிந்தது.அவர்களை சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடமிருந்து, 10 போதை மாத்திரைகள், மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !