ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
போத்தனூர்; கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது. முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க சம்பள உயர்வு, இடைநிலை, முதுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம், அரசாணை எண், 243 (நாள் 21.12.2023) ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.,ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்களுக்கான சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.