உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாய்; ஆனாலும் மணக்கிறது விற்பனை

மல்லிகைப்பூ கிலோ 2,000 ரூபாய்; ஆனாலும் மணக்கிறது விற்பனை

கோவை; கோவைக்கு சத்தியமங்கலம், காரமடை, புளியம்பட்டி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும், 10 டன் பூக்கள் வரத்து இருக்கும். விநாயகர் சதுர்த்தி என்பதால், நேற்று 25 டன் பூக்கள் வந்தன. சதுர்த்தியுடன் ஓணம் பண்டிகையும் நெருங்குவதால், பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மல்லிகை கிலோ 2000-2200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஜாதி மல்லி 1200, ரோஸ் 300-320, செவ்வந்தி 400, அரளி 300 ரூபாய், சம்பங்கி 500, செண்டு மல்லி 200 ரூபாய் வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு வெளியே எருக்கம் பூ மாலை, நீளத்தை பொறுத்து, 40 முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டது. கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் துரை ஆகியோர் கூறுகையில், 'மழை காரணமாக பூக்கள் விளைச்சல் சற்று குறைவு. ஓணம், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் காரணமாக, தேவை அதிகரித்துள்ளது. அனைத்து பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ