உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநில சிலம்பம் போட்டி ஜெ.சி.டி.க்கு 8 பதக்கம்

 மாநில சிலம்பம் போட்டி ஜெ.சி.டி.க்கு 8 பதக்கம்

கோவை, டிச. 26- மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், கோவை ஜெ.சி.டி., கல்லுாரி மாணவர்கள், ஐந்து தங்கம் உட்பட, எட்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சிலம்பம் சங்கம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டி கோவையில் நடந்தது. கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், கோவை பிச்சனுார் பகுதியில் உள்ள ஜெ.சி.டி. கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் பங்கேற்று ஒற்றை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, மான்கொம்பு, ஒற்றை சுருள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு,வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு உள்ளிட்ட 13 பிரிவுகளில் போட்டியிட்டனர். போட்டியின் இறுதியில், ஜெ.சி.டி., கல்லுாரி மாணவர்கள் லீனா ஸ்ரீ , பாலஜோதி, முகமது ஆசிக், கவுதம் குமார், கோகுல் ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரியின் செயலாளர் துர்கா சங்கர், முதல்வர் மனோகரன், உடற்கல்வி இயக்குனர்கள், சக பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி