மேலும் செய்திகள்
தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது
22-Apr-2025
கோவை : கோவை சுண்டப்பாளையம் எஸ்.எம்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 75. கடந்த 22ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 29 பவுன் நகைகள், ரூ.43 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். பழனிசாமி வடவள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள, 100 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில், திருட்டில் ஈடுபட்ட நபர் வாகனத்தில் செல்வது தெரிந்தது. அதன் வாயிலாக கோவை செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த சேதுராமன், 32 திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார் அவரிடமிருந்து, 29 பவுன் நகைகள், ரூ.43 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சேதுராமன் மீது, செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இரு வழக்குகளும், சாய்பாபா காலனியில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.
22-Apr-2025