குறுமைய விளையாட்டு பள்ளி மாணவர்கள் வெற்றி
பொள்ளாச்சி, ; கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியில், ஜெ.கிருஷ்ணாபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான தடகள போட்டிகள், சங்கவி வித்யா மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்றன. அதில், ஜெ.கிருஷ்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவர்கள் வெற்றி பெற்றனர். பிளஸ் 2 மாணவி சபீதா உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்றார். பிளஸ் 1 மாணவி கோமதி, நீளம் தாண்டுதல் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சூர்யகுமார், குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் இரண்டாமிடமும், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் நீலவேணி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகர், ஆசிரியர்கள் பாராட்டினர்.