உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்யசாயி சேவா சமிதியில் ஜோதி தியானம், பஜனை பயிற்சி

சத்யசாயி சேவா சமிதியில் ஜோதி தியானம், பஜனை பயிற்சி

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் ஜோதி தியானம் மற்றும் பஜனை பயிற்சி வகுப்பு நடந்தது.பொள்ளாச்சிசத்யசாயி சேவா சமிதியில், ஜோதி தியானம் மற்றும் பஜனை பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த நிகழ்வுக்கு சத்ய சாயி சேவா நிறுவனங்களின் கோவை மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன் வரவேற்றார்.மாநில பொறுப்பாளர்கள் கணபதி, வெங்கடேச சுந்தரம், பாலாவிகாஸ் குரு அனுராதா ஆகியோர், தியானம், தியானத்தின் வகைகள், வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் தியானம் குறித்த செய்திகள், ஜோதி தியானம், பயன்கள் ஆகியவற்றை செய்முறை விளக்கமாக விளக்கினர்.பஜனை பயிற்சி வகுப்பில், சாய் பிரசாத், கேசவராஜ், சந்தோஷ், ராமசந்திரன் ஆகியோர் பஜனை பாடல்களில் உள்ள புகழ் பாடல்கள், உணர்வு பூர்வமான பாடல்கள், கர்னாடிக் பாடல்கள், ஹிந்துஸ்தானி பாடல்கள் குறித்து விளக்கப்பட்டன.கஜல் பாடல்கள், பஜனில் இடம் பெற வேண்டிய பாடல் வரிசையும், பாடல்களும், குரல் வளம், பாடகர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், இசைக்கருவிகளின் முக்கியத்துவம், தாள வரிசைகள் குறித்து விரிவாக, விளக்கமாக உதாரணங்களுடன் விளக்கப்பட்டது.பொள்ளாச்சி சத்ய சாயி சேவா சமிதி கன்வீனர் சத்ய நாராயணன் நன்றி கூறினார். பொள்ளாச்சி, கோட்டூர் சமிதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை