சங்கரா பாலிடெக்னிக்கில் கபடியில் சாதித்த வீரர்கள்
கோவை: சரவணம்பட்டியில் உள்ள சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரியில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், 20 பள்ளிகளைச் சேர்ந்த அணியினர் உற்சாகமாக பங்கேற்றனர். சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறங்காவலர் பட்டாபிராமன், முதல்வர் பாலசுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குனர் கவியரசு உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.