உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை

பள்ளிகளுக்கு இடையே கபடி; நாளைக்குள் முன்பதிவு தேவை

கோவை; பள்ளிகளுக்கு இடையேயான 'டிரினிட்டிஸ் சாம்பியன்ஷிப் டிராபி' கபடி போட்டி வரும், 24ம் தேதி, ராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. 17 வயதுக்குட்பட்ட, 55 கிலோவுக்கும் எடை குறைவான மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் அணிகளுக்கு டிராபி, மெடல் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்படும். தவிர, சிறந்த ரைடர், டிபெண்டர், ஆல் ரவுண்டர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் நாளைக்குள், 86101 88426, 98942 61937, 96298 28100 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்; அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ