உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கம்மவார் மக்கள் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கம்மவார் மக்கள் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கோவை; தமிழ்நாடு கம்மவார் மக்கள் பேரவை சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம், செஞ்சிலுவை சங்கம் அருகில்நடந்தது. முற்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கோவையில் ஜி.டி.நாயுடு மணிமண்டபம், திருஉருவச்சிலை அமைக்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ் தேசியம் பேசும் பிரிவினைவாதிகளிடமிருந்து தெலுங்கு மக்களை பாதுகாக்க வேண்டும். கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில அமைப்பாளர் விவேகானந்தன் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் சம்பத்குமார் உட்பட 200க்கும் மேற்பட்போர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ