உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி   சூரசம்ஹார விழா

கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி   சூரசம்ஹார விழா

கோவை; கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது.கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கந்தசஷ்டி விழா நவ., 2 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று சுப்ரமணிய சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்றாடம் மாலை 6:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமி குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. இன்று மாலை முருகன் பெருமை சொற்பொழிவும், நாளை மாலை திருப்புகழ் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.நேற்று மாலை தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு கந்த சஷ்டி மஹா அபிஷேக நிகழ்ச்சியும், மஹா அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி,பெரியகடைவீதிகளில் முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை அறநிலையத்துறை சார்பில் சொற்பொழிவாளர் கோமதி வர்ணனை செய்கிறார். நாளை மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து மாங்கல்யா பிரசாதம் வழங்குதலும், தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது. நிறைவாக வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக சுவாமி திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ