கோட்டூர் குறுமைய போட்டி; கந்தசாமி பள்ளி அசத்தல்
ஆனைமலை; கோட்டூர் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையோன பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். கோகோ போட்டியில், 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் முதலிடமும், 14,17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட கைப்பந்து போட்டியில் மாணவர்கள் முதலிடமும் பெற்றனர். 11 வயதுக்கு உட்பட்ட சதுரங்க போட்டியில் மாணவி நவயுவின்சினி முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான கேரம் போட்டி இரட்டையர் பிரிவில் மாணவி ஜெயஸ்ரீ, அனு அனைத்து சுற்றுகளிலும் முதலிடம் பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்ட கோகோ, எறிபந்து போட்டிகளில் மாணவர்கள் இரண்டாமிடமும், 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் கைப்பந்து போட்டியில் இரண்டாமிடமும், 19 வயதுக்கு உட்பட்ட கேரம் ஒற்றையர் பிரிவில் மிதுன்யா இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், செல்வரசு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர். கோட்டூர் குறுமையத்துக்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையோன விளையாட்டு போட்டிகளில், கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.