மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
27-Aug-2025
போத்தனுார்; கோவை, செட்டிபாளையம் செல்லும் வழியில் வானொலி நகரில் கன்னி மூல கணபதி கோவில் உள்ளது. இதன் நான்காம் ஆண்டு விழா, இன்று காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், பால் குடம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து கோமாதா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மதியம் அன்னதானம், தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை, இரவு பரதநாட்டியம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
27-Aug-2025