எஸ்.என்.ஜி.சி. கிரிக்கெட் போட்டி டிராபி வென்றது கே.ஏ.டி., அணி
கோவை, ; ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான முதலாவது 'எஸ்.என்.ஜி.சி. டிராபி' கிரிக்கெட் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில், 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், கே.ஏ.டி., டர்ப் அணியும், டி.டி.பி., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கே.ஏ.டி., டர்ப் அணி, 10 ஓவர்களில், 123 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டி.டி.பி., அணி, 60 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாம் அரையிறுதியில், கோவை பிரதர்ஸ் அணியும், ரோலக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின. பேட்டிங் செய்த ரோலக்ஸ் அணி, 72 ரன்கள் எடுத்தது. கோவை பிரதர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு, 73 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இறுதிப்போட்டியில், கோவை பிரதர்ஸ் அணியும், கே.ஏ.டி., டர்ப் அணியும் மோதின. பேட்டிங் செய்த கே. ஏ.டி., டர்ப் அணி, 60 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கோவை பிரதர்ஸ்அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து, 52 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லுாரி இணை செயலாளர் பங்கஜ் குமார் கோப்பை வழங்கினார்.